http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர்களான சுப்மன் கில், குல்தீப் யாதவ், முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்தியாவில் ‘கொரோனா’ தொற்றின் இரண்டாவது அலை பரவுகிறது. அனைவருக்கும் ‘கொரொனா’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கிளம்பும் முன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனையடுத்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டார். கேப்டன் கோஹ்லி, ரகானே, புஜாரா, ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், இஷாந்த் சர்மா, பும்ரா, உமேஷ் யாதவ், தீபக் சகார், சித்தார்த் கவுல் ஆகியோர் முதற்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181137/KuldeepYadavShubmanGillCricketCovid19Vaccine.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181137/KuldeepYadavShubmanGillCricketCovid19Vaccine.html