http://ifttt.com/images/no_image_card.pngஉலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லி,’’ என, டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். கடந்த 2018–19ல் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட ‘பார்டர்–கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரை 2–1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இத்தொடரின் போது இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அதன்பின் இம்முறை (2020–21) ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 2–1 என, ‘பார்டர்–கவாஸ்கர்’ டிராபியை தக்கவைத்துக் கொண்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181614/ViratKohliTimPaineCricketIndiaAustraliaTestSeries.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621181614/ViratKohliTimPaineCricketIndiaAustraliaTestSeries.html