இந்திய வீரர்களுக்கு பரிசோதனை: பி.சி.சி.ஐ., திட்டவட்டம் | மே 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் மும்பைக்கு வருவதற்கு முன், மூன்று முறை ‘கொரோனா’ பரிசோதனை செய்திருக்க வேண்டும் என, பி.சி.சி.ஐ., திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 18–22), இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட (ஆக. 4–8, 12–16, 25–29, செப். 2–6, 10–14) டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இத்தொடருக்காக வரும் ஜூன் 2ல் இந்திய அணியினர் இங்கிலாந்துக்கு புறப்படுகின்றனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621094110/EnglandTourOfIndiaCricketIndiaSquadCOVID19Test.html