http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து வீரர்கள், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர் ‘கொரோனா’ பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்பினர். இத்தொடரில் இங்கிலாந்து சார்பில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ், இயான் மார்கன், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரான், டாம் கர்ரான், மொயீன் அலி உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621094293/NewZealandTestSeriesCricketEnglandSquadIPLPlayersNot.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621094293/NewZealandTestSeriesCricketEnglandSquadIPLPlayersNot.html