தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார் | மே 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, ‘கொரோனா’ தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான சென்னை அணியின் ‘பேட்டிங்’ பயிற்சியாளராக உள்ளார். சமீபத்தில் இவருக்கும், சென்னை அணியின் ‘பவுலிங்’ பயிற்சியாளர் தமிழகத்தின் பாலாஜிக்கும் ‘கொரோனா’ தொற்று உறுதியானதால் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் ஹசிக்கு எடுக்கப்பட்ட ‘ஆர்.டி.,–பி.சி.ஆர்.,’ பரிசோதனையின் முடிவு ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது. இதனால் இவர், விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008012/MichaelHusseyCOVID19NegativeWriddhimanSahaCOVID19Positive.html