ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடினம்: சரண்தீப் சிங் எச்சரிக்கை | மே 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஹர்திக் பாண்ட்யா பந்துவீசவில்லை என்றால், ஒருநாள், ‘டுவென்டி–20’ போட்டிக்கான ‘லெவன்’ அணியில் இடம் கிடைப்பது கடினம்,’’ என, சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் ‘ஆல்–ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா 27. இதுவரை 11 டெஸ்ட், 60 ஒருநாள், 48 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2019ல் முதுகுப்பகுதியில் ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்ட இவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதில்லை. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கும் இவர் தேர்வு செய்யப்படவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1621008619/HardikPandyaIndiaCricketOneDayT20TeamBowling.html