பயிற்சியை துவக்கினார் ஜடேஜா: இங்கிலாந்து பயணத்துக்கு ‛ரெடி’ | மே 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியை துவக்கினார் ஜடேஜா. இந்திய அணியின் ‛ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 32. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3வது டெஸ்டின் போது இவரது இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட பாதியில் விலகினார். இதனால் சொந்த மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர், 7 போட்டியில் 131 ரன் (161.72 ‛ஸ்டிரைக் ரேட்’), 6 விக்கெட் என ‛ஆல்–ரவுண்டராக’ அசத்தினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620832267/RavindraJadejaCricketWorldTestChampionshipFinalEnglandTestSeries.html