ஜடேஜா, விஹாரி தேர்வு: இந்திய அணி அறிவிப்பு | மே 07, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி அணிக்கு திரும்பினர். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, வரும் ஜூன் 18ல் சவுத்தாம்ப்டனில் துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் வரும் ஆக. 4–8ல் நடக்கிறது. மற்ற போட்டிகள் லார்ட்ஸ் (ஆக. 12–16), லீட்ஸ் (ஆக. 25–29), ஓவல் (செப். 2–6), மான்செஸ்டர் (செப். 10–14) நகரங்களில் நடக்கவுள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620392620/WorldTestChampionshipFinalEnglandTestSeriesIndiaSquadJadeja.html