http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடர் ரத்தானதால் சென்னை வீரர் ஜடேஜா, தனது பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்திய அணியின் ‛ஆல்–ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில், வீரர்களுக்கு ‛கொரோனா’ தொற்று உறுதியானதால், 14வது ஐ.பி.எல்., சீசன் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்குள்ள குதிரைகளை பராமரித்து வரும் இவர், சவாரி செய்து வருகிறார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620307121/RavindraJadejaCricketIndiaIPLChennaiFarmHouseHorse.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620307121/RavindraJadejaCricketIndiaIPLChennaiFarmHouseHorse.html