ஆஸ்திரேலிய வீரர் நிதியுதவி: ‘கொரோனா’ நிவாரணத்துக்கு | மே 04, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பெஹ்ரன்டோர்ப் நிதியுதவி வழங்குகிறார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், பிரட் லீ, இந்தியாவின் ஷிகர் தவான், ஜெயதேவ் உனத்கட், விண்டீசின் நிக்கோலஸ் பூரன், ஐ.பி.எல்., ராஜஸ்தான், டில்லி அணிகள், கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) சார்பில் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620145097/JasonBehrendorffAustraliaCoronoDonation.html