http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 209 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 1–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. இலங்கை சென்ற வங்கதேச அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் பல்லேகெலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 493/7 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 251 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 194/9 (‘டிக்ளேர்’) ரன் எடுத்தது. பின், 437 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்திருந்தது. லிட்டன் தாஸ் (14), மெஹிதி ஹசன் மிராஸ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620061624/SriLankaBangladeshSecondTestCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620061624/SriLankaBangladeshSecondTestCricket.html