http://ifttt.com/images/no_image_card.pngருதுராஜிடம் கேள்வி கேட்டதும், அவரது கண் பேசும் மொழியை பார்த்தேன். மனதில் கலக்கமில்லாமல் உறுதியாக இருந்ததால், மீண்டும் வாய்ப்பு அளித்தேன்,’’ என கேப்டன் தோனி தெரிவித்தார். மும்பையில் நடந்த பரபரப்பான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய சென்னை அணி(220/3), கோல்கட்டாவை(202) வீழ்த்தியது. கோல்கட்டா அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 31 ரன் எடுத்து தத்தளித்தது. பின் ரசல்(54), பாட் கம்மின்ஸ்(66) விளாச, ஆட்டம் சூடுபிடித்தது. கடைசி ஓவரில் தான் தோற்றது. சென்னையை பொறுத்தவரை துவக்க வீரர் ருதுராஜ் வாய்ப்பு பெற்றது எதிர்பாராதது. முதல் மூன்று போட்டிகளில்(5,5,10) சோபிக்காத இவர் மீது கேப்டன் தோனி நம்பிக்கை வைத்தார். தனது தேர்வை நியாயப்படுத்திய ருதுராஜ் 42 பந்தில் 64 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619109263/IPL2021T20CricketDhoniChennaiRuturajMaltiChahar.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619109263/IPL2021T20CricketDhoniChennaiRuturajMaltiChahar.html