ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கேகேஆர் - ஆர்சிபி மோதல்!

கொல்​கத்தா: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது.

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 18-வது சீசன் போட்​டிகள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் கண்​கவர் கலை நிகழ்ச்​சிகளு​டன் இன்று தொடங்​கு​கிறது. மே 25-ம் தேதி வரை நடை​பெறும் இந்த கிரிக்​கெட் திரு​விழா​வில் தலா 5 முறை சாம்​பியன்​களான சென்னை சூப்​பர் கிங்​ஸ், மும்பை இந்​தி​யன்​ஸ், 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், 2008-ல் பட்​டம் வென்ற ராஜஸ்​தான் ராயல்​ஸ், 2016-ல் வாகை சூடிய சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத், 2022-ல் கோப்பையை வென்ற குஜ​ராத் டைட்​டன்ஸ் ஆகிய அணி​களு​டன் 17 சீசன்​களாக பட்​டம் வெல்ல முடி​யாமல் போராடும் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு, பஞ்​சாப் கிங்ஸ் அணி​களும் மற்​றும் 3 ஆண்​டு​களுக்கு முன்​னர் அறி​முக​மாகி 2 முறை பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்த லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யும் பட்​டம் வெல்​வதற்​காக மல்​லுக்​கட்ட உள்​ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/RHyMD48