எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: சத நாயகன் நிதிஷ் குமார் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு நாயக பேட்டர் உருவான நாள் இன்று என்றால் அது மிகையல்ல. இந்திய அணி இன்று காலை 191/6 என்று இருந்த போது களமிறங்கினார் நிதிஷ் குமார் ரெட்டி, ஆட்டம் முடியும் போது இந்திய அணி 358/9. நிதிஷ் குமார் 105 நாட் அவுட். வாஷிங்டன் சுந்தர் (50) உடன் இணைந்து இருவரும் 127 ரன்களை 8வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது மெல்போர்னில் இந்தியாவின் 3வது பெரிய 8வது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆகும்.

191/6 என்ற நிலையிலிருந்து பிறகு 221 வரை சென்ற போது ஜடேஜா நேதன் லயனிடம் எல்.பி. ஆக 221/7 என்று இந்திய அணி ஃபாலோ ஆன் அபாயத்தில் இருந்தது, அந்த முதல் தடையை நிதிஷ் குமாரும் வாஷிங்டனும் கடந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/H0QIJWi