திருச்சி: பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் ஷாட்கன் பிரிவில் பங்கேற்கும் 5 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான பிருத்திவிராஜ் தொண்டைமான் இடம் பெற்றுள்ளார். இவர், ஆடவருக்கான டிராப் பிரிவில் பங்கேற்க உள்ளார்.
பிருத்திவிராஜ் தொண்டைமானுடன் இந்திய அணியில் ராஜேஷ்வரி குமாரி (மகளிர் டிராப்), அனந்த்ஜீத் சிங் நருகா (ஆடவர் ஸ்கீட்), ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான் (மகளிர் ஸ்கீட்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அனந்த்ஜீத் சிங் நருகா, மகேஸ்வரி சவுகான் ஆகியோர் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/MXfdeSY