சிஎஸ்கே–பஞ்சாப் போட்டிக்கு இன்று டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் டி 20 தொடரில் வரும் 1-ம் தேதி சிஎஸ்கே–பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று (29-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சி, டி, இ கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.1,700 எனவும் ஐ, ஜே, கே மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.2,500 எனவும் ஐ, ஜே, கே கீழ் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.4 ஆயிரம் எனவும் சி,டி,இ மேல் ஸ்டாண்டுகளின் டிக்கெட் விலை ரூ.3,500 எனவும், கேஎம்கே டெரஸ் டிக்கெட் விலை ரூ.6 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/bGDY7Ow