சிஎஸ்கே - ஹைதராபாத் போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் வரும் 28-ம் தேதி சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (25-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/TBSkJwq