“எனது ஒருநாள் கிரிக்கெட் அறிமுகம் இப்படி இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை” - திலக் வர்மா

மும்பை: எதிர்வரும் ஆசிய ஒருநாள் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த தொடரில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது அறிமுகமாக அமையும்.

20 வயதான திலக் வர்மா, அண்மையில் நிறைவடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது திறனை வெளிப்படுத்தி இருந்தார். அதையடுத்து ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இருக்க வேண்டும் என பலரும் சொல்லி வந்தனர். ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடி வருகிறார். தற்போது அயர்லாந்து பயணித்துள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/PtgbWHV