சுவிஸ் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி

பாஸல்: சுவிஸ் ஓபன் பாட்மிண்டன் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுடன் வெளியேறினார்.

சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரும் நடப்பு சாம்பியனுமான இந்தியாவின் பி.வி.சிந்து, 38-ம் நிலை வீராங்கனையான இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/IP0XDaC