பாட்செஃப்ஸ்ட்ரூம்: நடப்பு அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது கேப்டன் ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் டி பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/58dwPGC