T20 WC அலசல் | ஆலன், டெவன் கான்வே, சாண்ட்னர் அசத்தல் - 'சாம்பியன்' ஆஸி.யை தட்டித் தூக்கிய நியூஸிலாந்து!

சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை குரூப் 1 - சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் கடந்த டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை நியூஸிலாந்து துல்லியமாகத் தட்டித் தூக்கி முதல் வெற்றியை பெற்றது. அதுவும் மிகப் பெரிய 89 ரன்கள் வித்தியாச வெற்றியை ஈட்டியது நியூஸிலாந்து. அதுவும், 2011-க்குப் பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் நியூஸிலாந்து வீழ்த்தியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஏரோன் பிஞ்ச் அந்த மண்ணின் தன்மையை அறிந்தவர். அவர் எதற்காக முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதுவும் நியூஸிலாந்து மார்டின் கப்திலை உட்கார வைத்து ஃபின் ஆலன் என்ற உயரமான வலது கை வீரரை இறக்கும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்க்கவேயில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/h2INA1o