T20 WC | விரட்டல் மன்னன் விராட் கோலியின் மறக்க முடியாத டி20 இன்னிங்ஸ்... பாகிஸ்தானுக்கு எதிரான சிலிர்க்கும் வெற்றி!

மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டி அதன் அனைத்து ஹைப் மற்றும் ஊதிப்பெருக்கலையும் தாண்டி ஒரு மிகப்பரபரப்பான போட்டியாக அமைந்து. தீபாவளி நன்னாளுக்கு முதல் நாள் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி என்பது பண்டிகைக் கொண்டாட்டத்தை விடவும் பெரிய கொண்டாட்டமாக அமைந்து விட்டது.

18-வது ஓவரில் ஷாஹின் அஃப்ரீடியை சாத்தி எடுத்தது முதல் சினிமா கிளைமாக்ஸ் ஆன கடைசி ஓவர் வரை: 17-வது ஓவர் முடிவில் இந்திய அணி 112/4 என்று தோல்வி முகமே காட்டியது. 3 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றிக்குத் தேவை. ஒரு ஓவருக்கு 16 ரன்கள் என்பது பெரிய டார்கெட். ஷாஹின் ஷா அஃப்ரீடி, ராவுஃப் போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் வீசவிருக்கின்றனர். அப்போது கோலி 42 பந்துகளி 46 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 32 பந்துகளில், 1 பௌண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்களையும் எடுத்து களத்தில் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/jLTodtK