தென்னாப்பிரிக்க நாட்டில் 2023 தொடக்கத்தில் ஃப்ரான்சைஸ் டி20 லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்த லீக் தொடர் SA20 என அறியப்படுகிறது. இதற்கான வீரர்களை இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ள ஆறு அணிகளும் ஏலம் எடுத்துள்ளன. ஏலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஆறு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் லீக் தொடரை போலவே தென்னாப்பிரிக்காவிலும் இந்த லீக் தொடர் நடைபெற உள்ளது. இதனை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது. இந்த லீக் தொடரில் பங்கேற்கும் ஆறு அணிகளையும், ஆறு ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தான் வாங்கியுள்ளன. அதனால் உலக அளவில் இது மினி ஐபிஎல் தொடர் எனவும் அறியப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/S0CJNYj