உலக தடகள சாம்பியன்ஷிப் | டிரிப்பிள் ஜம்ப்பில் தங்கம் வென்றார் யூலிமர் - ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் அவினாஷ் ஏமாற்றம்
யூஜின்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஒலிம்பிக் சாம்பியனான வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ், டிரிப்பிள் ஜம்ப்பில் தொடர்ச்சியாக 3-வது முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் யூஜின் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலாவின் யூலிமர் ரோஜாஸ் 15.47 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் அவர், தங்கம் வென்றிருந்தார். ஜமைக்காவின் ஷானிகா ரிக்கெட்ஸ் 14.89 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், அமெரிக்காவின் டோரி பிராங்க்ளின் 14.72 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JEPLu0X