44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்: 3-வது நாளிலும் இந்திய அணி அசத்தல் வெற்றி

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-வது நாளிலும் இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இரு பிரிவிலும் 6 அணிகளுக்கு எதிரான இந்திய அணி வெற்றி கண்டது.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஓபன் பிரிவில் இந்திய ஏ அணியானது கிரீஸை எதிர்த்து விளையாடியது. இந்திய ஏ அணியில் ஹரிகிருஷ்ணா பென்டலா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, சசிகிரண் ஆகியோர் இடம் பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/g9jmOr1