கோபன்ஹேகன்: இந்திய நீச்சல் வீரரும், நடிகர் மாதவனின் மகனுமான வேதாந்த் மாதவன், டேனிஷ் ஓபன் நீச்சல் தொடரில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்திய சினிமா நடிகர்களில் ஒருவரான நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், சிறு வயது முதலே நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி செய்து வருகிறார். 16 வயதான அவர் இந்திய நாட்டின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் நடைபெறும் டேனிஷ் ஓபன் தொடரில் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/eKBMlOm