மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் மகத்தான ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கெய்ரான் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை அறிந்த கிரிக்கெட் வீரர்கள் அது குறித்து என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.
கடந்த 2007-ல் சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் என்ட்ரி கொடுத்தவர் கெய்ரான் பொல்லார்ட். இவரை கிரிக்கெட் உலகின் பொல்லாதவன் எனவும் சொல்லலாம். அந்த அளவுக்கு இவரது ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். தனது நாட்டுக்காக 196 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் பொல்லார்ட். அதன் மூலம் 4275 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். துடிப்பான ஃபீல்டரும் கூட. 6 அடி 4 அங்குலம் கொண்ட உயரம்தான் இவரது பிளஸ். கிரிக்கெட் பந்தை அடித்து நொறுக்கும் அதிரடி பேட்ஸ்மேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5lix8d2