IND vs WI 3rd ODI | கடைசி நேரத்தில் ஒன் மேன் ஷோ காட்டிய மே.இ.தீவுகள் வீரர்... ஒயிட்வாஷ் செய்த இந்தியா!
குஜராத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.
266 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தமுறையும் ஓபனிங் செட் ஆகவில்லை. சாய் ஹோப் 5 ரன்களிலேயே சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து மற்றொரு ஓபனர் 14 ரன்களில் தீபக் சஹார் பந்துவீச்சில் வெளியேறினார். இதன்பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கேப்டன் பூரன் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கடந்த போட்டியை போல இந்தப் போட்டியையும் அதிரடியாக துவக்கிய பூரன் 34 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். இப்படி முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் கடைசிநேரத்தில் அந்த அணியின் டெயிலண்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் அல்ஜாரி ஜோசப் இருவரும், இந்திய பவுலர்களை சற்று பதறவைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/h4RLabG