வெல்லுமா ‘வேகம்’...தீருமா சோகம்: புஜாரா ஏக்கம் | டிசம்பர் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய ‘வேகப்புயல்கள்’ சாதிப்பர். இங்கு முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,’’என புஜாரா தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 26ல் செஞ்சுரியனில் துவங்குகிறது. இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்க தொடர் எப்போதும் கடினமானது. 1992 முதல் படை எடுக்கிறது. ஒருமுறை கூட தொடரை வெல்ல முடியவில்லை. இங்குள்ள ஆடுகளங்களுக்கு ஏற்ப இம்முறை பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் என 6 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2018ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரை இந்தியா இழந்தது. இருப்பினும் ஷமி 15, பும்ரா 14 விக்கெட் வீழ்த்தி மிரட்டினர். இதே போல இம்முறை ‘வேகங்கள்’ சாதித்தால், நமது சோகங்கள் தீரும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639936579/SouthAfricaTestSeriesIndianFastBowlersPujara.html