விண்டீஸ் வீரர்களுக்கு கொரோனா: ஒருநாள் தொடருக்கு சிக்கல் | டிசம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் வீரர்கள் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகம். பாகிஸ்தான் வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று ‘டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்காக, கடந்த டிச. 9ல் கராச்சி வந்த விண்டீஸ் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ‘டி–20’ தொடரில் இருந்து விலகி, ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639673148/WindiesPakistanOneDayCricketSeriesCOVID19PositiveShai.html