http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவின் வார்னர், லபுசேன் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் ‘ரெகுலர்’ கேப்டன் கம்மின்ஸ், ஹேசல்வுட்டிற்கு பதிலாக மைக்கேல் நேசர் (அறிமுகம்), ஜெய் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியின் ஜாக் லீச், மார்க் உட் நீக்கப்பட்டு ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தேர்வாகினர். ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639672578/Ashes2ndTestCricketAdelaideAustraliaEnglandWarnerMarnusLabuschagne.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639672578/Ashes2ndTestCricketAdelaideAustraliaEnglandWarnerMarnusLabuschagne.html