ஆஸ்திரேலிய ஆதிக்கம் தொடருமா: பகலிரவு டெஸ்டில் | டிசம்பர் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக அடிலெய்டில் இன்று துவங்குகிறது. இதில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற ஆஸ்திரேலியா 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று அடிலெய்டில், பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. ஆஸ்திரேலிய அணி, இதுவரை விளையாடிய 8 பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639588267/Ashes2ndTestCricketEnglandAustraliaDayNightTest.html