தமிழக அணி அதிர்ச்சி தோல்வி: விஜய் ஹசாரே லீக் போட்டியில் | டிசம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரி அணிக்கு எதிரான விஜய் ஹசாரே லீக் போட்டியில் ஏமாற்றிய தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ‘வி.ஜே.டி.,’ முறைப்படி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் முதல் தர தொடரான விஜய் ஹசாரே டிராபி 20வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 எலைட் குரூப், ஒரு பிளேட் குரூப் என 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. எலைட் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி, தனது முதல் மூன்று போட்டியில் மும்பை, கர்நாடகா, பெங்கால் அணிகளை வீழ்த்தியது. நான்காவது லீக் போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின. மழையால் தலா 49 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639330714/VijayHazareTrophyTamilNaduPondicherryOneRunLossDinesh.html