வங்கதேச வீரர் ஓய்வு | நவம்பர் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்தின் மகமதுல்லா, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். வங்கதேச ‘ஆல்–ரவுண்டர்’ மகமதுல்லா 35. கடந்த 2009ல் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான இவர், இதுவரை 50 போட்டியில், 2914 ரன், 43 விக்கெட் வீழ்த்தி உள்ளார். கடைசியாக, கடந்த ஜூலை மாதம் ஹராரேயில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்ற இவர், 150 ரன் விளாசினார். இப்போட்டியின் போது விரைவில் டெஸ்டில் இருந்து விடை பெறப் போவதாக தெரிவித்திருந்தார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு இவர் தேர்வு செய்யப்படவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637857344/MahmudullahBangladeshTestCricketRetirement.html