http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ தொடரின் சிறந்த வீராங்கனைக்கான தொடர் நாயகி விருதை இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் தட்டிச் சென்றார். ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 8 பேர் விளையாடுகின்றனர். மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சார்பில் இந்திய ஒருநாள், ‘டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளையாடுகிறார். ‘ஆல்–ரவுண்டரான’ இவர், லீக் சுற்றில் பங்கேற்ற 11 இன்னிங்சில், 3 அரைசதம் உட்பட 399 ரன் (சராசரி 66.50, ‘ஸ்டிரைக் ரேட்’ 135.25) குவித்துள்ளார். பவுலிங்கில் 15 விக்கெட் (எகானமி 7.46) சாய்த்தார். அதிக சிக்சர் (18) அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637771320/HarmanpreetKaurWomenBigBashLeaguePlayerOfTheTournament.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1637771320/HarmanpreetKaurWomenBigBashLeaguePlayerOfTheTournament.html