http://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரி அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் சாய் கிஷோர் ‘ஹாட்ரிக்’, ஹரி நிஷாந்த் அரைசதம் கைகொடுக்க தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. லக்னோவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி கேப்டன் நாராயண் ஜெகதீசன், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636204445/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduPondicherrySai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/11/1636204445/SyedMushtaqAliT20TrophyCricketTamilNaduPondicherrySai.html