சிக்கலில் புது ஐ.பி.எல்., அணி: ‘பெட்டிங்’ தொடர்பு புகார் | அக்டோபர் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் புதிதாக இணைந்த ஆமதாபாத் அணிக்கு ‘பெட்டிங்’ நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., ‘டி–20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு முதல் லக்னோ (ரூ. 7090 கோடி), ஆமதாபாத் (ரூ. 5625 கோடி) அணிகள் தேர்வு செய்யப்பட, பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 12,715 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதனிடையே, லக்சம்பர்க்கை தலைமையிடமாக கொண்டுள்ள சி.வி.சி., கேபிடல் குழுமம் கால்பந்து, பார்முலா 1, ரக்பி விளையாட்டில் முதலீடு செய்துள்ளது. முதன் முறையாக கிரிக்கெட்டுடன் இணைந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635526976/IPL2022T20CricketNewTeamAhmedabadCVCCapitals.html