குயின்டன் டி காக் மன்னிப்பு | அக்டோபர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇனவெறிக்கு எதிராக நான் முழங்காலிட்டு சபதம் ஏற்பது மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்தால் நல்லது. நான் இனவெறி பிடித்தவன் இல்லை’’ என, தென் ஆப்ரிக்காவின் குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பையில் இனவெறிக்கு எதிராக வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக போட்டி துவங்குவதற்கு முன், மைதானத்தில் முழங்காலிட்டு சபதம் ஏற்கின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க வீரர்கள் மைதானத்தில் முழங்காலிட்டு அமர்ந்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் மட்டும் இடுப்பில் கைவைத்து நின்றார். பின், விண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன், அனைவரும் மண்டியிட வேண்டும் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு தனது வீரர்களிடம் தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த குயின்டன், போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635439200/QuintondeKockSouthAfricaCricketT20WorldCupRacism.html