விண்டீஸ் அணியில் ஹோல்டர் | அக்டோபர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை (‘டி–20’) தொடருக்கான விண்டீஸ் அணியில் காயத்தால் விலகிய மெக்காய்க்கு பதிலாக ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான விண்டீஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஒபெத் மெக்காய் இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது காலில் காயமடைந்த இவர், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடவில்லை. இத்தொடரில் இருந்து விலகிய இவருக்கு மாற்று வீரராக, முன்னாள் கேப்டன் ‘ஆல்–ரவுண்டர்’ ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635438938/ICCT20WorldCupCricketWindiesJasonHolder.html