http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் புதிதாக லக்னோ, ஆமதாபாத் அணிகள் களமிறங்க உள்ளன. இந்த அணிகளுக்கு ஏலம் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ. 12,715 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் கடந்த 2008 முதல் ஐ.பி.எல்., ‘டி–20’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு முதல், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட உள்ளது. புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகை ரூ. 2000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 22 நிறுவனங்கள் ரூ. 10 லட்சம் கொடுத்து ‘டென்டரை’ பெற்றன. இதற்கான ஏலம் நேற்று மதியம் துபாயில் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா, ஐ.பி.எல்., கட்டுப்பாட்டுக்குழு தலைவர் பிரிஜேஷ் படேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635182501/IPL2022T20CricketNewTeamsAhmedabadLucknowSanjivGoenka.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635182501/IPL2022T20CricketNewTeamsAhmedabadLucknowSanjivGoenka.html