ஐபிஎல்; ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று: இன்றைய போட்டி நடைபெறுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி மோதவுள்ள நிலையில் அந்த அணியின் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. 27 நாட்கள் நடக்கும் போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3zuu0sz