http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவின் குல்தீப் யாதவ் முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இந்திய ‘சுழல்’ வீரர் குல்தீப் யாதவ் 26. இதுவரை 7 டெஸ்ட், 65 ஒருநாள், 23 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி–20’யில் விளையாடிய குல்தீப், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியில் இடம் பெற்றுள்ளார். 14வது சீசனுக்கான மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க எமிரேட்ஸ் சென்ற இவருக்கு, ‘பீல்டிங்’ பயிற்சியின் போது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் தாயகம் திரும்பிய இவர், முழங்காலில் ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இதற்கான புகைப்படத்தை இவர், தனது ‘டுவிட்டரில்’ பதிவிட்டுள்ளார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632934511/KuldeepYadavCricketKneeSurgery.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632934511/KuldeepYadavCricketKneeSurgery.html