நாடு திரும்பினார் குல்தீப்: முழங்கால் காயத்தால் விலகல் | செப்டம்பர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுழங்கால் காயத்தால் ஐ.பி.எல்., தொடரில் இருந்து விலகிய குல்தீப் யாதவ் நாடு திரும்பினார். இந்திய ‘சுழல்’ வீரர் குல்தீப் யாதவ் 26. இதுவரை 7 டெஸ்ட், 65 ஒருநாள், 23 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியில் இடம் பெற்றுள்ளார். ஐ.பி.எல்., 14வது சீசனுக்கான மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்க எமிரேட்ஸ் சென்ற இவருக்கு, ‘பீல்டிங்’ பயிற்சியின் போது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632760560/IPL2021T20CricketKolkataKuldeepYadavInjuryReturnto.html