http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து சுழற்பந்துவீச்சு ‘ஆல்–ரவுண்டர்’ மொயீன் அலி 34. இதுவரை 64 டெஸ்ட் (195 விக்கெட், 2914 ரன்), 112 ஒருநாள் (87 விக்கெட், 1877 ரன்), 38 சர்வதேச ‘டுவென்டி–20’ (21 விக்கெட், 437 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2014ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், கடைசியாக லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார். தற்போது இவர், எமிரேட்சில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632760718/MoeenAliEnglandCricketRetirementTestCricket.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632760718/MoeenAliEnglandCricketRetirementTestCricket.html