சீறிய சென்னை ‘சிங்கங்கள்’: கோஹ்லி அணி ஏமாற்றம் | செப்டம்பர் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் சிங்கம் போல சீறிய சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் விளாசல் வீணானது. எமிரேட்சில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. பாலைவன மணல் புயல் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதமானது. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் சச்சின் பேபி, கைல் ஜேமிசன் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, டிம் டேவிட் (அறிமுகம்) சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632501492/IPL2021T20CricketChennaiBangaloreViratKohliDevduttPadikkal.html