பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு | செப்டம்பர் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,’’ என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி (159/3, 15.1 ஓவர்) 7 விக்கெட் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை (155/6, 20 ஓவர்) வீழ்த்தியது. ஒரு கட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 78 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்து மும்பை அணி, 20 ஓவரில் 155 ரன் மட்டும் எடுத்தது. சமீபத்தில் பவுலிங்கில் அசத்திய கோல்கட்டா பவுலர்கள், பெங்களூரு அணியை 92 ரன்னுக்குள் சுருட்டினர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632500574/IPL2021T20CricketKolkataMorganSlowOverRateFine.html