டில்லி அணி கலக்கல் வெற்றி: தவான், ஸ்ரேயாஸ் அபாரம் | செப்டம்பர் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி பவுலர்கள் அசத்த, ஐதராபாத் அணி 20 ஓவரில் 134 ரன் எடுத்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்னர், வில்லியம்சன் ஏமாற்றினர். எமிரேட்சில், ஐ.பி.எல்., 14வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி, ரிஷாப் பன்ட் வழிநடத்தும் டில்லி அணியை சந்தித்தது. டில்லி அணியில் தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்ட ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்தார். ஐதராபாத் அணியில் ஹோல்டர், ரஷித் கான், வார்னர், வில்லியம்ஸ், டில்லி அணியில் நார்ட்ஜே, ரபாடா, ஸ்டாய்னிஸ், ஹெட்மயர் என, வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றனர். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632328804/IPL2021T20CricketDelhiHyderabadRabadaRishabhPant.html