நம்பிக்கை தந்த ருதுராஜ், பிராவோ: கேப்டன் தோனி பாராட்டு | செப்டம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமும்பைக்கு எதிரான போட்டியில் ருதுராஜ், பிராவோ எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டனர்,’’ என, தோனி தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி 20 ரன் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சென்னை அணி ஒருகட்டத்தில் 24 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த ருதுராஜ் கெய்க்வாட், ரவிந்திர ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது. அதன்பின் ருதுராஜ் (4 சிக்சர்), டுவைன் பிராவோ (3) ஜோடி சிக்சர் மழை பொழிந்தது. இதனையடுத்து சென்னை அணி 20 ஓவரில் 156 ரன் குவித்தது. இதில் 58 பந்தில் 88 ரன் (4 சிக்சர், 9 பவுண்டரி) விளாசிய ருதுராஜ், ஆட்ட நாயகன் விருது வென்றார். பவுலிங்கில் அசத்திய பிராவோ, 3 விக்கெட் கைப்பற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632157288/IPL2021T20CricketChennaiMumbaiMahendraSinghDhoniRuturaj.html