ஸ்ரேயாஸ் வருகை பலம்: தவான் உற்சாகம் | செப்டம்பர் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஸ்ரேயாஸ் வருகையால் எங்கள் டில்லி அணி பலமடைந்துள்ளது,’’ என, ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. ஐ.பி.எல்., தொடருக்கான டில்லி அணிக்கு கேப்டனாக உள்ளார். கடந்த சீசனில் டில்லி அணியை பைனல் வரை அழைத்துச் சென்ற இவருக்கு, மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவரால், இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசனில் பங்கேற்க முடியவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட இவர், எமிரேட்சில் நடக்கவுள்ள மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளில் களமிறங்க காத்திருக்கிறார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1631461870/ShreyasIyerIPLT20CricketDehliDhawan.html