ஸ்டூவர்ட் பின்னி ஓய்வு | ஆகஸ்ட் 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவின் ஸ்டூவர்ட் பின்னி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னி 37. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், 2014ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார். ‘ஆல்–ரவுண்டரான’ இவர், இதுவரை 6 டெஸ்ட் (194 ரன், 3 விக்கெட்), 14 ஒருநாள் (230 ரன், 20 விக்கெட்), 3 சர்வதேச ‘டுவென்டி–20’ (35 ரன், 1 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 2014ல் வங்கதேசத்துக்கு எதிராக 4.4 ஓவரில் 4 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தார். ஐ.பி.எல்., அரங்கில் மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்காக விளையாடினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630341697/StuartBinnyCricketIndiaRetirement.html